மீண்டும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்: சுப்பிரமணியம்

Sri Lanka Upcountry People Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lanka Government
By Theepan Sep 14, 2022 03:48 PM GMT
Report

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தற்போது அரசாங்கம் நிறுத்தாவிட்டால் மீண்டும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(14.09.2022) இடம்பெற்ற ஒன்று கூடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நம் நாட்டில் எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பாக உள்ளது.

பொருளாதாரப் பிரச்சினை

மீண்டும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்: சுப்பிரமணியம் | Protests To Be Carried Again Subramaniam

தற்பொழுது பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக பொதுமக்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். அகிம்சை வழியிலே அரசாங்கத்திடம் சில கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் முன்வைத்து போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டங்களை முடக்குவதும், போராட்டக்காரர் மீது தண்ணீர் தாரை விசுறுவதும், கண்ணீர்ப் புகை வீசுவதும், நியாயமற்ற முறையில் கைது செய்து சிறையில் அடைப்பதும் அரசாங்கம் செய்கின்ற மிலேச்சத்தனமான காரியமாகும்.

அகிம்சை வழிப் போராட்டம்

மீண்டும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்: சுப்பிரமணியம் | Protests To Be Carried Again Subramaniam

இந்த செயற்பாடு அரசாங்கத்தினதும், அரச தலைவரினதும் சர்வாதிகாரத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

எனவே அரசாங்கம் ஜனநாயகத்திற்கு புறம்பான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி, செய்யப்பட்ட அகிம்சை போராட்டக்காரர்களை விடுவித்து அவர்களின் கைது தொடர்பில் கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் போன்ற நெருக்கடி நிலைமைக் காரணமாக தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எரிபொருள் விலையேற்றத்தினால் உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்காமையினால் தொழிலைச் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்டத்துறையின் நெருக்கடி நிலை

மீண்டும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்: சுப்பிரமணியம் | Protests To Be Carried Again Subramaniam

பெருந்தோட்டத்துறையில் உள்ளவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கமும்,  அரசியல்வாதிகளும் கூறி வந்தாலும் பத்து 10% வீதமான தேவைகளைக் கூட நிறைவேற்றியதாக தெரியவில்லை.

இது காலம் காலமாக பெருந்தோட்டதுறையினரை ஏமாற்றுவதற்காக கூறும் வாய்மொழியே தவிர வேறு ஒன்றும் இல்லை. கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் போதியளவு கிடைக்காமையினால் தூர இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்திய இழுவைப் படகுகள் எமது கரையை அண்மித்த பகுதிகளில் வந்து மிகவும் சுதந்திரமாக எமது வாழ்வாதாரத்தையும், வளங்களையும் அழித்து செல்கின்றனர்.

எந்த தடைகளும், எதிர்ப்பும் இல்லாமல் இந்திய இழுவைப் படகுகள் எமது கரையை அண்மித்த பகுதிகளில் தொழில் செய்வதற்கு எமது அரசாங்கம் மறைமுக ஆதரவு வழங்குகிறதோ என சந்தேகம் எழுகின்றது.

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு

மீண்டும் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்: சுப்பிரமணியம் | Protests To Be Carried Again Subramaniam

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.

விவசாயிகள் மண்ணெண்ணெய் மற்றும் உரத்தினை பெரும்போகம் மற்றும் சிறுபோகப் பயிர்ச் செய்கைக்கு உரிய நேரத்தில் தேவைக்கேற்ப வழங்காமையினால் நெற்செய்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதனால் அரிசி விலை அதிகரித்து வருகின்றது. அத்தோடு மரக்கறி வகைகளும் பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த வீழ்ச்சி காரணமாக மக்கள் அரை வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்கு வழியின்றி தவிக்கின்றனர்.

மேலும் பெண் தலைமை தாங்குகின்ற குடும்பங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியாமல் அல்லாடுகின்றனர்.

விடுக்கப்பட்ட வேண்டுகோள்

1) காலி முகத்திடலிலும், வீதிகளிலும் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்.

2) கைது செய்யப்பட்ட ஜனநாயகப் போராட்டக்காரர்கள் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். 

3) எல்லை தாண்டுகின்ற இந்திய இழுவைப் படகுகளையும், மீனவர்களையும் கைது செய்ய வேண்டும். 

4) உள்ளூரிலுள்ள இழுவை மடித்தொழிலை இல்லாதொழிக்க வேண்டும். 

5) மண்ணெண்ணெய் விலையை குறைக்க வேண்டும் அல்லது கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மானிய முறையில் போதியளவு மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். 

6) தேவைக்கேற்ப விவசாயிகளுக்கு உரம் கிடைக்க வழிவதை செய்ய வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வறுமை மற்றும் வாழ்வாதார சீர்கேட்டை நிவர்த்தி செய்வதற்கனை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

7)பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றதாக கூறப்படுகின்ற வாழ்வாதார உதவிகளின் வெளிப்படைத் தன்மைகளை தெரியப்படுத்த வேண்டும். 

இது போன்ற விடயங்களை தற்போது அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறின் எதிர்காலத்தில் நாடு தழுவிய ரீதியில் மக்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம்” எனவும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US