பெரும் பதற்றம் - இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்! நெதன்யாகுவின் வீடு முற்றுகை
ஈரான் மீதான போரை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் புரிந்து வருகின்றன. கடந்த மாதம் 28ஆம் திகதி தொடங்கிய இந்த போர் ஒரு மாதத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது ஈரான் போரை கைவிட வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டுக்குள் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இரவில் பொதுமக்கள் இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
டெல்அவிவ், ஹைஃபா, ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் பேரணி சென்றனர். கடந்த 29ஆம் திகதி அமெரிக்கா முழுவதும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இதன்படி, நியூயோர்க், வாஷிங்டன் டி.சி., லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டதுடன் கூட்டமாக தெருக்களில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..