கொழும்பில் எரிசக்தி அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் அவரது காருக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் குழு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு வளாகத்தில் இன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இரகசியங்களை வெளியிட முடியாது...

தேக்கு கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாரிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அமைச்சரவை இரகசியங்களை வெளியிட முடியாது என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சின் செயலாளரை வெளியேற விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனத்தை சுற்றி வளைத்தமை குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam