ஆளும் கட்சி தொழிற்சங்க தலைவரின் காரை பின் தொடர்ந்து சென்ற தாக்கிய ஆர்ப்பாட்டகாரர்கள்
கொழும்பு காலி முகத் திடலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தனது காரை பின் தொடர்ந்து வந்து தாக்கியதாக அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள பக்கதில் அவர் இதனை கூறியுள்ளார். இரவு 12 மணியளவில் தான் தனது தனிப்பட்ட காரில் கொள்ளுப்பிட்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
காரை தாக்கிய பின்னர், அதனை புரட்டி போடவும் ஆர்ப்பாட்டகாரர்கள் முயற்சித்தனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்தும் 5 வது நாளாகவும் காலி முகத் திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள்,யுவதிகள், முதியவர்கள், இன, மத, கட்சி பேதங்கள் இன்றி கலந்துக்கொண்டுள்ளதாக அதில் கலந்துக்கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri