பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் (Video)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 6ஆம் திகதியிலிருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.
கைதிகளின் கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காததால் போராட்டம் ஒரு வார காலமாக தொடர்கின்றது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர்களை காப்பாற்றுமாறும் கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு தவிர்ப்பு போராட்டம்
தம்மை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் என கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019 - 2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களால் உணவு தவிர்பு போராட்டம் தொடர்ந்துள்ளது.
கொழும்பு மகசின் சிறைச்சாலை
இதன்போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று(12) காலை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய், சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: தீபன், ராகேஷ்







உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 13 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
