பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் கறுப்பு பட்டி போராட்டம் (Photos)
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் நிலவும் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்பு பட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று (24.01.2023) அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வாக வைத்தியசாலை வளாகத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும் கறுப்பு பட்டி அணிந்து கடமையினை மேற்கொண்டும் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
கறுப்பு பட்டி போராட்டம்
அரச வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்து அதற்குரிய வழங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற பேரில் அரசாங்கத்தினால் பறிக்கப்படும் சம்பள பணத்திற்கு எதிராகவும், இந்த கறுப்பு பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதும் அரசாங்கத்தினால் நிர்வகிக்க தவறிய மருந்து பொருட்களுக்கான முறையற்ற வழங்குதலுக்கு எதிராக அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்படும் போராட்டம் எமது வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்ளும் போராட்டம்
மன்னார் மாவட்ட வைத்தியசாலை பகுதிகளில் கருப்பு கொடி மற்றும் கருப்பு ,
தோரணங்கள் பறக்கவிடப்பட்டு, வைத்தியர்கள் தமது கையில் கருப்பு பட்டி அணிந்து
கடமையை முன்னெடுத்துள்ளனர்.
மருந்து தட்டுப்பாடு ஒரு வருடத்துக்கு மேலாக நாட்டில் நிலவி வருகிறது. இப்போது அது உச்சகட்டத்தில் உள்ளது. அனேகமான சத்திர சிகிச்சைக்குரிய மருந்துகள், அனஸ்தீசியா ட்ரக்ஸ் அதாவது நினைவு மாற்று சத்திர சிகிச்சைக்குரிய அனேகமான மருந்துகள் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இல்லை. இதனால் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் மாவட்ட சனத் தொகைக்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஏனென்றால் சிறிய சிகிச்சை மேற்கொள்வதற்கு கூட தேவையான மருந்துகள் இல்லை இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால், ஓ. பி. டி நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான மருந்துகள் கூட இப்பொழுது இல்லை.
நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்
பாரியதொரு சவாலை மக்கள் இதன் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இந்த நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி அறவிடும் முறை மூலம் அரச வேலையில் இருக்கக்கூடிய நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளிடம் இந்த வரி திணிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் வைத்தியர் ஒருவரின் அல்லது உயர்நிலை அதிகாரியிருவரினதோ 12 மாத சம்பளங்களில் இரண்டு மாத சம்பளத்தை அரசாங்கம் வரியாக பெற்றுக்கொள்கின்றது.
இதனால் வைத்தியர்கள் பலர் இந்த நாட்டை விட்டு வெளியேற இது காரணமாக இருக்கிறது. கடந்த வருடம் மாத்திரம் 600 தொடக்கம் 700 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
வைத்தியர்கள் தட்டுப்பாடு
இதனால் பெரியளவு வைத்தியர்கள் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது. மன்னாரை எடுத்துக்கொண்டால் இங்கு ஸ்கேன் வைத்திய நிபுணர் இல்லை இகன்சல்டன்கள் பலர் இல்லை இஅதோடு சத்திர சிகிச்சைக்குரிய நிபுணர் ஒருவர் மாத்திரமே இருக்கிறார்.
மற்றவர் வெளிநாடு சென்றுவிட்டார், இன்னும் படித்தவர்கள், வைத்தியர்கள், நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது .
இப்படி தொடர்ந்தால் இன்னும் ஒரு சில மாதங்களில் மன்னார் வைத்தியசாலையில்
பெரிய அளவில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே அரசாங்கம் இந்த அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீள பெற வேண்டும்
என்பதுடன் மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார உபகரண தட்டுப்பாட்டை
உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.








பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
