தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரி நாள் இன்று! (Photos)

Protest IndependenceDay Tamilpeople Missingpeople
By Independent Writer Feb 04, 2022 09:38 PM GMT
Report

ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள் எனவும் ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமக்கே உரித்தான தனித்துவமான மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்பவற்றுடன் தம்மைத் தாமே தனியரசாக ஆண்ட தமிழினம் 1505ஆம் ஆண்டில் இத் தீவில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களிடமும், அவர்களை தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களிடமும் தனது ஆட்சியதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்ததுடன் 1796 இல் இலங்கைத் தீவில் காலடி வைத்த ஆங்கிலேயர்களிடம் கடைசித் தமிழ் மன்னன் பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடு ஒட்டுமொத்த தமிழ் இராச்சியங்களும் வீழ்ச்சியடைந்தது.

தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரி நாள் இன்று! (Photos) | Protest Tamilpeople Independenceday

அதே போன்று தீவின் தென் பகுதியை ஆண்ட சிங்கள மன்னர்களும் தோற்கடிக்கப்பட்டு தீவு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

1833ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கை தனி நிர்வாகமாகவும், தென்பகுதியை வேறு நிர்வாகமாகவும் நிர்வகித்து வந்த ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதி கருதி இலங்கைத் தீவு முழுவதனையும் 1833ஆம் ஆண்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர்.

தமது நிர்வாக வசதிக்காக நாடு முழுவதனையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1948ஆம் ஆண்டு இத் தீவை விட்டு வெளியேறும் போது வடக்கு கிழக்கு தமிழர்களின் ஆட்சியதிகாரத்தினை தமிழர்களிடம் கையளிக்காமல் தீவு முழுவதைனையும் ஆளும் அதிகாரத்தை சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் ஒப்படைத்துச் சென்று விட்டனர்.

தமிழ் தேசிய மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரி நாள் இன்று! (Photos) | Protest Tamilpeople Independenceday

அதனால் 1948ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் தம்மைத் தானே ஆளும் இறைமையை சிங்களவர்களிடம் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள்.

தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தியாளும் அதிகாரம் பிரித்தானியர்களது கைகளிலிருந்து பெரும்பான்மையினச் சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு உத்தியோக பூர்வமாக மாற்றப்பட்ட தினமே பெப்ரவரி 04 ஆகும்.

அயல் இராட்சியத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களை அடக்கியாளும் ஒற்றை ஆட்சியை கட்டவிழ்துவிட்டது.

இதனாலேயே இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தமிழ் தலைவர்கள் பிரகடனப்படுத்தியதுடன், கடந்த ஏழு தசாப்தங்களாக சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.

அதனை ஒர் போராட்டமாகவே தமிழ் தலைவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர்.அந்தப் போராட்த்தில் திருமலை நடராஜன் தனது இன்னுயிரை தியாகம் செய்தமையை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை மதிக்காது தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கல், மொழியையும் கலாசாரத்தையும் அழித்தல், வரலாற்றை திரிவுபடுத்தி அழித்தல், பொருளாதாரத்தை கொள்ளையடித்தல், கல்வியை அழித்தல் போன்ற செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிங்கள தேசத்தின் அடையாளங்களுக்குள் தமிழ் தேசத்தின் அடையாளங்களை கரைத்து தமிழ் தேசத்தின் இருப்பை அழித்து எமது தாயகத்தில் எமது மக்களை சிறுபான்மையினமாக மாற்றி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கையேற்தி வாழும் நிலைக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளே கடந்த 74 வருடங்களாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

இச் செயற்பாடுகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் ஐனநாயக வழியில் போராடினார்கள். தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினார்கள்.

அந்த ஆயுதப் போராட்டம் இனவழிப்பு யுத்த மூலம் அழிக்கப்பட்டுள்ளது. அப்போராட்டம் தமிழ் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை தடுத்து பாதுகாக்கும் கவசமாக விளங்கியது.

அந்த பாதுகாப்பு கவசம் நீக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசத்தின் இருப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பிய வகையில் அழிக்கும் வேலையை தீவிரப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலைகளானது சுதந்திரதினத்தை முன்னெப்பொழுதும் இல்லாதளவுக்கு கறுப்பு நாளாக அனுஸ்டிப்பது மட்டுமல்ல அன்றய தினம் மக்கள் பல்லாயிரமாக திரண்டு வீதியில் நின்று எதிர்ப்பு போராட்டம் நடாத்த வேண்டிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது.

மேற்படி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராட வேண்டிய நிலையில் இந்த அழிப்புச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி எமது மக்களை விரும்பி ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சிகள் தமிழ் மக்கள் நம்பியவர்களால் முன்னெடுக்கப்படுவதென்பது மிகவும் ஆபத்தானது.

இந்நிலையில் மக்கள் தமது நிலங்களையும், மொழி கலாசாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட வேண்டும்.

யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும்,

யுத்தத்தின்போது இனவழிப்புச் செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், அரசியல் கைதிகள் விடுதலை உறுதிப்படுத்தப்படவும், தமிழ் தேசத்தின் அங்கீகாரம் கிடைத்திடவும் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம். எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Gallery
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US