தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கோரி 7ஆவது நாளாக தொடர் போராட்டம் (Photos)
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 7 நாள் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை நாவிதன்வெளி 4ம் கொலனி பிரதேசத்தில் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையைகள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு 4ம் கொலனி ஆலையத்தில் இருந்து பேரணியாகச் சென்று பொது திடலில் ஒன்றினைந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு, ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசாவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என 150ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து கோரிக்கையடங்கிய மகஜர் வாசிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து போராட்டகாரர்கள் விலகிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam