கிளிநொச்சி பாடசாலையை மீட்க விரைவில் போராட்டம் : சுகாஷ் சூளுரை
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலையின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் (அ.த.க) பாடசாலை என்பதே சரியானது என்பதையும், அரசினர் முஸ்லிம் கலவன் (அ.மு.க) பாடசாலை என்று பயன்படுத்துவது தவறென்பதையும் கல்வித் திணைக்களம் உறுதிப்படுத்தியதன் பிற்பாடும், விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழில் அரசினர் முஸ்லீம் கலவன் (அ.மு.க) (G.M.M)பாடசாலை என்றே அதிபரால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வித் திணைக்களத்தின் உத்தரவை மீறி அதிபர் செயற்படுவதன் பின்புலம் என்ன? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் விரைவில் பாடசாலையை மீட்கும் போராட்டத்தை ஆரம்பிப்பதைத் தவிர வேறு
வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.