காலிமுகத் திடல் போராட்டத்திற்கு இன்று 30 வது நாள்
இலங்கையில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முற்பகல் ஆரம்பமான இந்த போராட்டம் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நடைபெற்று வருகின்றன. அரசியல், கட்சி பேதமின்றி மற்றும் எந்த தலைமைத்துவமும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு கலைஞர்கள், பல்லைக்கழகங்களின் மாணவர்கள், சர்வ மதத் தலைவர்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவு வழங்கி வருவதுடன் அவ்வப்போது போராட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டகாரர்கள், காலிமுகத் திடலில் உள்ள போராட்ட களத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகை ஆகியவற்றையும் கொண்டாடினர்.
இரவு, பகல், மழை, வெயில் என பாராது, நாட்டின் பல பகுதிகளில் இருந்து போராட்ட களத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போராட்ட களத்தில் இருக்கும் போராட்டகாரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசி வசதிகளை வழங்க பல அமைப்புகள் மட்டுமல்லாது அணிகள் மற்றும் வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அத்துடன் போராட்டகாரர்கள் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்ட களத்திற்கு கோட்டா கோ கம என பெயரிட்டதுடன் அதனை கூகுள் வரைப்படத்திலும் இணைத்தமை முக்கிய அம்சமாகும்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
