ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பரபரப்பு (Video)
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து வருகின்றது.
பொலிஸாரினால் ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு முன்னால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு கடவைகளை கடந்து அலுவலகத்திற்குள் நுழைய முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் தீவிர முயற்சியால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடலுக்கு முன்னால் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்கள் இணைந்து தற்போது போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்துள்ளனர்.
இந் நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் இணைந்து பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.








நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
