நாம் நீலகாமம்! கொழும்பில் நாளை மாபெரும் அறவழிப் போராட்டம்

Colombo Ratnapura Crime Tea Estate Workers Protest
By Rakesh May 04, 2026 01:17 PM GMT
Report

இரத்தினபுரி - காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் “நாம் நீலகாமம்” எனும் தொனிப்பொருளில் அறவழிப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் நாளை(05.05.2026) கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்..! அரியாசனம் ஏறினால் போடப்போகும் முதல் கையெழுத்து

ஜோசப் விஜய் சந்திரசேகர் எனும் நான்..! அரியாசனம் ஏறினால் போடப்போகும் முதல் கையெழுத்து

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி

நீலகாமம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தொழிலாளர் குடியிருப்பொன்றைப் பிரத்தியேகப் பாதுகாப்பு படையைக் கொண்ட தோட்ட நிர்வாகத்தினரால் அண்மையில் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மலையகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அத்துடன், கறுப்பு ஆடை அணிந்துகொண்டு, முகத்தைமூடும் வகையிலான தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டு தோட்டத்துக்குள் புகுந்த கும்பல், வன்முறையைக் கையாண்டு வீட்டை அடித்து நொறுக்கியது.

நாம் நீலகாமம்! கொழும்பில் நாளை மாபெரும் அறவழிப் போராட்டம் | Protest Organized In Colombo Theme Naam Neelakam

நாட்டில் சட்டவிதி முறைகளை கையாள்வதற்கு பொலிஸார் இருக்கையில், தண்டனை வழங்க நீதிமன்றம் செயற்படுகையில் பிரத்தியேக பாதுகாப்பு குழு, சட்டத்தை கையில் எடுத்தமை அடக்குமுறையின் உச்ச கட்டமாவதுடன் ஜனநாயக விரோதச் செயல் எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நீலகாமம் வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் “நாம் மலையகம்“அமைப்பின் ஏற்பாட்டில் நீலகாமம் தோட்டத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது “நீலகாமம்” பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையின் முக்கிய அங்கமான காணி உரிமையை வென்றெடுக்கும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், பெருந்தோட்டப் பகுதிகளுக்கு கூலிப்படை வேண்டாம் என வலியுறுத்தியும் இந்த அறவழிப் போராட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்தப் போராட்டத்திற்கு மலையக சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடக அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எனப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு

தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு

33 சதவீதம் விஜய் தொட்டுவிட்டார்..! 2 மணிக்கு பிறகு மாறும் தமிழக வெற்றிக்கழக நிலவரம்

33 சதவீதம் விஜய் தொட்டுவிட்டார்..! 2 மணிக்கு பிறகு மாறும் தமிழக வெற்றிக்கழக நிலவரம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US