மெல்போர்ன் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்: அரசுக்கு எதிராகத் திரண்ட மக்கள்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கோவிட் தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளமையால் அதனை எதிர்த்து மெல்போர்ன் நகரில் பல ஆயிரம் பேர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி முன்னெடுத்துள்ளனர்.
மெல்போர்னில் புதிய தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக நேற்று இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதைக் கட்டாயமாக்கியது சர்வாதிகாரம் என விக்டோரியா மாகாண அரசுக்குப் போராட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தடுப்பூசி போடாதவர்களை உணவருந்துதல் மற்றும் விழாக்கள் போன்ற நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே மக்கள் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
மேலும் விக்டோரியா பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸை ஹிட்லர் மீசையுடன் #DictatorDan என்ற ஹேஷ்டேக்குடன் சித்தரிக்கும் பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.