கேப்பாபிலவு பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்! பொலிஸார் குவிப்பு

Sri Lanka Police Mullaitivu Sri Lankan protests
By Shan May 01, 2026 10:14 AM GMT
Report

புதிய இணைப்பு   

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் (01.05.2026) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபிலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கைகள்

இன்றைய தொழிலாளர் தினத்தன்று குறித்த போராட்டமானது கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டதனை தொடர்ந்து பிரதான வீதி வழியாக பேரணியாக வருகை தந்து இராணுவ படைத்தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கேப்பாபிலவு பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்! பொலிஸார் குவிப்பு | Protest Keppapilavu Indigenous Lands Issue

கேப்பாபிலவு மக்களினுடைய 55 குடும்பங்களின் 59.5 ஏக்கர் மக்கள் குடியிருப்பு காணியும், இராணுவ வசம் உள்ள மிகுதி மொத்தமாக 171 ஏக்கர் காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.


குறித்த போராட்டத்தின் போது இராணுவமே எமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறு, நீதி எங்கே நீதி எங்கே? , ஜனநாயக நாடா அல்லது இராணுவ ஆட்சியா?, முகாம்களை மூடு நிலங்களை விடு , பாதுகாப்பு என்ற பெயரில் பறிக்காதே தமிழர் நிலத்தை, விவசாய நிலம் இராணுவத்திற்கு எதற்கு? , ஏழை மக்களின் வயிற்றில் அடிக்காதே, எமது வாழ்விடம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது போராட்ட இடத்தில் பெருமளவான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

முதலாம் இணைப்பு 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இன்று இராணுவ படைத்தலைமையகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகியுள்ளனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை

திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - ஆரம்பமான பிரேதப்பரிசோதனை

பாதுகாப்புப்படையினரின் நடவடிக்கை

கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபிலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

கேப்பாபிலவு பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்! பொலிஸார் குவிப்பு | Protest Keppapilavu Indigenous Lands Issue

இன்றைய தொழிலாளர் தினத்தன்று நடைபெறவுள்ள இந்த போராட்டமானது தங்கள் பூர்வீக நிலங்களை விடுவித்து தாயக மண்ணில் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வலியுறுத்துகின்றனர்.

“போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 17 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது.ஆனால் நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் நியாயமல்ல” என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபிலவு மக்களின் பிரதான கோரிக்கை, அவர்களுக்கு சொந்தமான காணிகளை உடனடியாக விடுவித்து, தங்கள் மண்ணில் அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்

பொலிஸாரிடம் சிக்கிய இளம் யுவதி - விசாரணையில் காதலன் தொடர்பில் வெளியான தகவல்

பொலிஸாரிடம் சிக்கிய இளம் யுவதி - விசாரணையில் காதலன் தொடர்பில் வெளியான தகவல்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US