“74 வருட சாபத்திற்கு முற்றுப்புள்ளி” :ஜே.வி.பியின் பாரிய போராட்டம் (Video)
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இவ் எதிர்ப்பு போராட்டமானது இன்று பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடையில் ஆரம்பமாகியுள்ளது.
“74 வருட சாபத்திற்கு முற்றுப்புள்ளி ” என்னும் தொணிபொருளிலே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் எதிர்ப்பு போராட்டம் காரணமாக விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹைலெவல் வீதி ஊடாக போக்குவரத்து முழுவதுமாக தடைப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் இன்று இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றிருந்தது. இந்நிலையில் அதில் பங்கேற்காது அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி இன்று இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
