காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இலங்கையில் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம், நேற்றையதினம்(30.08.2025) லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்னால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிரித்தானியப் பிரதமரின் பணிமனை வரைக்குமான நடைப்பயணமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டப் பேரணி
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியவாழ் தமிழ் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டில் இயங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
