மீள்குடியேறிய சிங்கள மக்களுக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம் (Photos)
வடக்கு - கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தினால் வெளியேறி தற்போது மீள் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வவுனியா மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்பாக இன்று (01.11.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வருகை மேற்கொண்டிருந்த நிலையிலேயே வவுனியா, போகாஸ்வேவ பகுதியினை சேர்ந்த மக்களினால் இந்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் இருந்த சிங்கள மக்களை படுகொலையும் செய்திருந்தனர். அவற்றிலிருந்து தப்பித்து சென்ற சிங்கள மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள்குடியேறிருந்தனர்.
வாக்காளர் இடாப்பு சிக்கல்
எனினும், வடகிழக்கில் மீள்குடியேறிய தமிழ் மற்றும் முஸ்ஸிம் மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்கள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி வழங்கப்பட்டிருந்த போதிலும் மீள் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு அரசாங்கம் எவ்வித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் வவுனியா போகாஸ்வேவ பகுதியிலுள்ள மக்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலகம் என்பன வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் வாக்காளர் இடாப்பு அனுராதபுரம் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நல்லிணக்கம் என தெரிவிக்கும் ஜனாதிபதி வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை
மாத்திரம் புறக்கணிப்பது ஏன்? எமக்கு அடிப்படை வசதிகள், விவசாய காணிகள்,
வாக்காளர் இடாப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள
வேண்டும் என கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.













பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
