நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் புதிய நடைமுறைகள் - மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை!
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவகங்கள், விருந்தகங்கள் மற்றும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கும் நல்லூர் பிரதேச சபையினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனின் தலைமையில் இன்றைய தினம் (16.12.2025) இக்கலந்துடையாடல் நடைபெற்றுள்ளது.
இதில், பல அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில், அடுத்த ஆண்டு முதல் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குபட்பட்ட உணவங்கள், விருந்தகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
முக்கிய தீர்மானங்கள்
அதற்கமைய, 01.01.2026 ஆம் திகதி முதல் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

1.நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் லஞ்சீற் (Lunch Sheet) முற்றாக தடை செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் 01.01.2026ஆம் திகதி முதல் உணவங்கள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என்பன உணவுப் பரிமாற்றத்தின் போது லஞ்சீற் பயன்படுத்த முடியாது.
2.திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வருகைதருவோர் தங்களுடைய வாகனங்களை பொதுபோக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நிறுத்துவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மண்டப உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொடுப்பதோடு அதனை கண்காணிக்கவும் வேண்டும்.
3.உணவுகளை தயாரித்தல், கையாளுதல் ஆகியவற்றில் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
4.உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் கட்டண கழிவகற்றல் முறைமையின் கீழ், தங்களை உடன் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு தவறும் பட்டசத்தில் அவர்களுக்கான வியாபார உரிமங்கள் இரத்துச் செய்யப்படும்.

5.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட ஆளுகைப்பகுதியில் இன்னமும் பதிவு செய்யப்படாத உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களை நடத்துபவர்கள் எதிர்வரும் 31.12.2025 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்டசத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
6.விடுதிகளை நடாத்துகின்ற விடுதி உரிமையாளர்கள் தங்களுடைய விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு கழிவகற்றல் தொடர்பில் அறிவுத்தல்கள் வழங்க வேண்டியதுடன் அவர்கள் தரம் பிரிக்கப்பட்ட கழிவுகளை இடுவதற்கு வசதியாக தங்களுடைய விடுதிகளில் கழிவுத் தொட்டிகள் வைக்கப்பட வேண்டும்.
7.குறித்த விடயங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகின்றனவா என்பதனை சுகாதார பரிசோதகர்கள், இறைவரி பரிசோதகர்கள் நேரில் கண்காணித்து அறிக்கையிடுவர்.
இந்நிலையில், குறித்த அறிவுத்தல்களை மீறுச் செயற்படும் உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்படுவதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.



தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam