தலவாக்கலையில் வெடித்த போராட்டம்.. வெளியான பின்னணி!
தீபாவளி தினத்தன்று பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞன் விபத்தில் மரணித்தமைக்கு நீதி கோரி தலவாக்கலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர் மத்தியில் தீபாவளி தினத்தன்று அதிகாலை 1.30 மணியளவில் தலவாக்கலை ஆட்டோ சாரதிகள் உட்பட இளைஞர்கள் வீதியில் பட்டாசு கொளுத்தி கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது போது ஹட்டன் பகுதியை நோக்கி வந்த போல்ரோ வாகனம் ஒன்றில் மோதியதில் குறித்த இளைஞன் கடும் காயங்களுக்கு உள்ளாகி லிந்துலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவு
அதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.

இவரின் மரணத்திற்கு நீதி கோரியே நேற்று இரவு அவரது சடலம் வீட்டுக் கொண்டு வரும் வழியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்ற நிலை உருவானதுடன் பொது போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் சென்கிளையார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போல்ரோ வாகனத்தின் சாரதி சம்பவ தினத்தன்று தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam