கடந்த சனிக்கிழமை இராணுவத்துடனான சந்திப்பில் கோட்டாபயவின் முக்கிய தீர்மானம் (VIDEO)
தற்போதைய சூழலில் தமிழ் மக்களை படுகொலை செய்து விட்டு அதனை பயமாக சிங்கள மக்களுக்கு அரசாங்கம் காண்பிக்கும் என்றும்,இதன் பின்னணியில் இந்தியாவின் ரோ செயற்படும் என்றும் பிரபாகரன் என அனைவராலும் அறியப்பட்ட இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ரீதியில் போராட்டங்களை அடக்கினால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதுடன்,தற்போது தீவிரமடைந்துள்ள போராட்டத்தினை ஆயுத முனையில் அடக்கும் நிலை ஏற்படவுள்ளது.இதற்கான ஒரு வெளிப்பாடாகவே ரம்புக்கனை சம்பவம் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
அதாவது காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தினை உடனடியாக அடக்காது போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கையாக வேறொரு இடத்தில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது காவல்துறையினர் ஒருபோதும் மேலிடத்து உத்தரவின்றி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளமாட்டார்கள்.இருப்பினும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் இதற்கான திட்டம் சனிக்கிழமை வகுக்கப்பட்டுள்ளது.
அதாவது சனிக்கிழமை அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகள்,முக்கியஸ்தர்கள் போன்றோருடன் சனிக்கிழமை தனித்தனியாக ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு பின்னர் காலிமுகத்திடலில் இராணுவ ஆயுதங்கள் குவிக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.