புசல்லாவையில் பேருந்து சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம் (Video)
புசல்லாவை-பெரட்டாசி தோட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று (05.06.2023) முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
கடந்த மே 27 ஆம் திகதி இ.போ.ச பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை கம்பளை டிப்போ வழங்கியிருந்தது.
மக்களின் கோரிக்கை
பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்கூட இடம்பெற்றிருந்தன.
எனினும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டால் பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது அனுமதிக்க முடியாத செயல் என போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர். அத்துடன், தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
பெரட்டாசி வீதி ஊடாக பேரணியாக வந்த மக்கள், கெமுனுபுர சந்தியை வந்தடைந்த பின்னர் போராட்டத்தை முன்னெடுத்தனர். உடனடியாக இ.போ.ச பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இடித்துரைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
