36 வருடங்களாக போராடும் யாழ். மக்கள் - அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி 12 வாரமாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டமானது, இன்று(06.09.2026) பலாலி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
36 வருடங்களாக போராடும் மக்கள்
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கையின் பகல் நேர வெப்பநிலை! சுமார் ஒரு வாரத்திற்கு பதிவாகப்போகும் நிலைமை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
சமைக்க மறுத்து நடன வகுப்பிற்கு சென்ற மனைவி: கோபத்தில் தாக்கிய கணவன்: வீபரிதத்தில் முடிந்த சண்டை News Lankasri