சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினால் கவனயீர்ப்பு போராட்டம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் எதிர்வரும், 01.10.2024 அன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தொடர்ச்சியாக தமது போராட்டமானது மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி நடைபெற்று வருகின்ற நிலையில், இம்மாதம் அதாவது 30.09.2024 அன்று நடைபெற இருக்கின்ற போராட்டம் 01.10.2024 முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
விமான தாக்குதல்
இறுதி யுத்தத்தின்போது பல சிறார்கள் செல்விச்சிக்கலாலும் விமான தாக்குதலும் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதும் ஒரு சில சிறார்கள் இராணுவத்தினிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கான நீதி இதுவரையும் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவற்றை வலியுறுத்தி இச்சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளனர்
அத்துடன் இப்போராட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
