நல்லூரடியில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!
நல்லூர் தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் அமைக்கப்படுவதற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆலய முன்றல்
குறித்த அசைவ உணவகம் அமைக்கும் நடவடிக்கை மதச்சாந்தி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (20.05.2025) முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அனைத்து நல்லூர் கந்தன் பக்தர்களும் ஒன்றுகூடி, இந்த அசைவ உணவகத்துக்கு எதிரான திடமான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டுகிறோம் என ஏற்பாட்டாளர்கள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மாலை 4.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இந்த போராட்டத்தை நடாத்துவதற்கு சைவ அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
