யாழில் ஆசிரியர் ஒருவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் (Photos)
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக நேற்றையதினம் (02.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்பட்டதாக தெரிவித்தே பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கு எதிரான செயற்பாடுகளை
ஆசிரியர் சங்கமொன்றினை பயன்படுத்தி தமது சொந்த நலனை அடிப்படையாக கொண்டு பாடசாலைக்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்வதாக குற்றம் சாட்டிய பெற்றோர் குறித்த ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan