ஹட்டனில் தோட்டப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக் கோரி எழுச்சி போராட்டம்
ஹட்டனில், தோட்டப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் நில உரிமைகள் கோரி எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டது.
இந்த போராட்டமானது, இன்று(03.05.2026) இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி - காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
காணி பிரச்சினைகளுக்கான தீர்வு
நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது, மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் உறுதியாக வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், நீலகாமம் மக்களுக்கு நீதி வேண்டும் எனவும், தோட்டப்பகுதிகளுக்கு கூலிப்படை அவசியம் இல்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தோட்டப் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்க அனுமதிக்கப்படாது என்றும், தலைமுறை தலைமுறையாகக் அடிபணிந்து இருந்தாலும் இனியும் அடிப்படைய போவதில்லை என்றும் உறுதியளித்துள்னர்.
இந்நிலையில், பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கொழும்புக்கு சென்று போராடுவதற்கும் தயாராக உள்ளோம் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்








