அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் : ஐவர் கைது
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், 'மக்கள் போராட்ட இயக்கம்' இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்றையதினம் (25.11.2023) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின்; புகைப்படத்தை ஒரு குழுவினர் எரிக்க முயன்றதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி காயம்
சம்பவத்தின் போது நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri