கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம்
வேலைவாய்ப்புக்களுக்காக நுண்ணறிவு அளவுகோல் பரீட்சை ஒன்றை அரசாங்கம் நடாத்த தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார பட்டதாரிகளினால் மாபெரும் போராட்டம் ஒன்று கொழும்பில் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றையதினம்(24.02.2025) சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நுண்ணறிவு அளவுகோல் பரீட்சை
இதேவேளை, டிப்ளோமா கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், வேலைவாய்ப்புக்கு நுண்ணறிவு அளவுகோல் பரீட்சை நடத்தப்படுவதாக இருந்தால் 4 வருடங்கள் கல்வி கற்றதற்கு என்ன பயன் எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






