கொழும்பில் புரட்சி வெடிக்கும்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் பஞ்ச சூழ்நிலையை எதிர்நோக்கும் மக்களால் எதிர்காலத்தில் பாரியதொரு போராட்டம் முன்னெடுக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அதிகரிக்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மக்களால் முன்னெடுக்கப்பட்டதை விட மோசமான ஒரு போராட்டம் அண்மையில் முன்னெடுக்கப்படுமெனவும் வன்முறைகள் நாட்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு சர்வதேச நாடுகளிடம் கடன் கோருவது தீர்வாகாது.
மக்கள் தமது கஷ்டங்களின் நிமித்தம் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவர்களை அடக்க முயற்சிப்பதும் நெருக்கடிகளுக்கு தீர்வாகாது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி