கறுப்பு ஜூலைக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம் முன்னெடுப்பு
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு ஜூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்றையதினம்(24) பிரித்தானியாவில் இடம்பெற்றது.
பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன்
இலங்கை அரசினால் 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாட்களுக்குள் இடம்பெற்ற 3000 அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 150,000 மேற்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்கள் இழக்கப்பட்ட கறுப்பு ஜூலைக்கு எதிராக லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் ,sw1p 3jx இல் இடம்பெற்றது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது என்ற தொனிப்பொருளோடு லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் , தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன் கறுப்பு ஜூலைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
