பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போராட்டம் (PHOTOS)
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் (Ampitiye Sumanarathana Thero) பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுத்துள்ளார்.
இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும், அதனை வழங்குவதற்கு தமக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்த நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளாக தெரியவருகிறது.
அதேநேரம் குறித்த தேரரை வெளியேற்றக்கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக
முடங்கியதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டது.




