ஆர்ப்பாட்டங்களை நடத்த மாற்றிடம்! அரசாங்கம் அறிவிப்பு
பொதுமக்களின் அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான மாற்று இடம் ஒன்றை அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் இன்று(27) உரையாற்றும் போது இதனை அறிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை அண்மித்ததாக விஹாரமஹாதேவி பூங்காவின் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் விருப்புக்குரிய இடம்
காலிமுகத்திடல் பிரதேசம் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விருப்புக்குரிய இடமாக இருப்பதன் காரணமாக அங்கு ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிப்பது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார்.
எனவே அங்குள்ள ஆர்ப்பாட்ட இடம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.