நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ள இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவைச் சங்கம்
தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக தரத்திற்கு உயர்த்தும் செயற்பாட்டை துரிதப்படுத்த வேண்டும் என கோரி நாளைய தினம் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவைச் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க மிரியான தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிவித்தலில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சமான தூர நோக்கு (சௌபாக்கிய தெக்ம) தேர்தல் விஞ்ஞாபனத்தில் எடுத்துரைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக தரத்திற்கு உயர்த்துவது சம்பந்தமான முன்மொழிவு கல்வி அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் முறையாக செயற்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதற்கமைய இது சம்பந்தமான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று 2020.12.14ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
அவ்வாறே கல்வியியற் கல்லூரிகளில் கல்வி பயிலும் ஆசிரிய பயிலுனர்களின் எதிர்பார்ப்பும் இதுவரையில் தாங்கள் கற்கும் பாடநெறிகளில் எவ்வித பிரயோசனமான தலையீடுகளையும் ஏற்படுத்தாத தேசிய கல்வி நிறுவனத்தில் இருந்து விலகி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் நிறுவப்படும் பல்கலைக்கழகமொன்றில் அங்கீகரிக்கப்பட்ட கல்விமானிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதாகும்.
ஜனாதிபதி 2021.06.25ஆம் திகதி மக்கள் முன்னிலையில் எடுத்துரைத்த கூற்றின் பிரகாரம் இச் செயல்முறை கொள்கையாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து கல்விச் சீர்திருத்தம், தொலைக்கல்வி மற்றும் திறந்த பல்கலைக்கழக இராஜாங்க செயலாளர் உட்பட தேசிய கல்வி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் கல்வி அமைச்சிற்கு சென்று கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு வலியுறுத்தி இதுவரையில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த சுபீட்சமான தூர நோக்கு (சௌபாக்கிய தெக்ம) தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்கைகளை மாற்றிச் செயற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்வியியற் கல்லூரிகளில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எந்த ஒரு விரிவுரையாளரும் அவர்களின் கருத்திற்கு உடன்படாததாலும், இதுவரை இரண்டு தசாப்தங்களாக ஆசிரியர் கல்வியை அழிவுப்பாதையில் இட்டுச்சென்றதேசிய கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகளில் நெருங்கிய அனுபவத்திற்கு நாங்கள் உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் இப்படியான ஒரு தீர்மானத்தின் பாரிய விளைவுகளை எண்ணி கவலை அடைகின்றோம்.
சுபீட்சமான தூர நோக்கு (சௌபாக்கிய தெக்ம) கொள்கை திட்டத்தில் தேசிய கல்வி நிறுவனம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதாக குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில் எமக்கு சந்தேகம் எழுகின்றது.
இச் செயற்பாடு மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைத்து ஆசிரிய கல்வியியலாளர்களையும் அங்கத்துவமாக கொண்ட எமது தொழிற்சங்கத்தினால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய 2021.07.07ஆம் திகதி கல்வி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கும், அதற்கு சமமாக மாகானங்களுக்கிடையில் அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கல்வியியற் கல்லூரிகளின் வளாகத்தின் முன்பாக எதிர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்தல் மற்றும் தற்போது விரிவுரையாளர்களால் நிகழ்நிலை மூலம் மேற்கொள்ளும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் மதிப்பீட்டு செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை விரைவாக சீர்செய்யப்படாத பட்சத்தில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கும் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
