கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் போராட்டம் முன்னெடுப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (25) காலை கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றுள்ளது.
50இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் தொடர்ச்சியாக இப்போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
இந்த போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் கல்முனை தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை வழங்கி வந்துள்ளதோடு இதே போன்று கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள், பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.
மேற்குறித்த உண்ணாவிரதப் போராட்டமானது அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்னால் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம், குருகல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |