விபத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி போராட்டம்
தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நேற்று(1) தலவாக்கலை நகரில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
போராட்டம்
செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் நுவரெலியாவில் இருந்து நேற்று தலவாக்கலை பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பல ஆட்டோக்களும் அணிவகுத்து வந்தன. சடலம் தலவாக்கலை நகரை வந்தடைந்த பின்பு, போராட்டம் இடம்பெற்றது.
குடும்ப உறவினர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சட்டநடவடிக்கை
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சாரதிக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சுமார் அரை மணிநேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்ததுடன் சம்பந்தப்பட்ட சாரதிக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்ததையடுத்து நிலைமை சீரானது.
உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam