கிளிநொச்சியில் அட்டைப் பண்ணைகளை அகற்றித்தருமாறு கோரி போராட்டம் (Video)
கிளிநொச்சி - கிராஞ்சி இலவங்குடா கடற் பகுதியில் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போரட்டம் நேற்று (13.11.2022) 45ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அட்டைப் பண்ணைகளை அகற்ற கோரிக்கை
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இலவங் குடா கடற்பரப்பில் தங்களுடைய பாரம்பரிய தொழில்களை மேற்கொள்வதற்கு இடையூறாக அமைக்கப்பட்டிருக்கின்ற அட்டைப் பண்ணைகளை அகற்றி தாம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வழி வகைகளை செய்து தருமாறு கோரி கடந்த செப்டெம்பர் மாதம் இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல்வேறு இடங்களிலும் இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவித்திருந்த நிலையில் அவற்றை ஒரு வார காலத்துக்குள் அட்டைப்பண்ணைகளை அகற்றித் தருவதாக தெரிவித்திருந்த போதும் இதுவரை அட்டைப்பண்ணைகளை அகற்றித் தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அட்டைப் பண்ணைகளை அகற்றி தமது தொழில் நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்து தரும்
வரை தொடர்ந்தும் தாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
