மன்னாரில் 13ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்

Mannar SL Protest Northern Province of Sri Lanka
By Ashik Aug 15, 2025 10:31 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் காற்றாலை, கனியமணல் செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாகவும் நேற்று(15 ) மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து  வருகின்றனர்.

மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியாவாரும் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈழத்தமிழருக்கு ஆபத்தாகப் போகும் ஐ.நாவின் முடிவு..!

ஈழத்தமிழருக்கு ஆபத்தாகப் போகும் ஐ.நாவின் முடிவு..!

வாக்குறுதியை எவ்வாறு நம்புவது

குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். 

மன்னாரில் 13ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் | Protest Continue In Mannar

முன்னதாகவே கடந்த வாரம் போராட்டம் இடம்பெற்ற நிலையில் ஒருவார காலம் காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்த நிலையில் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நள்ளிரவு நேரங்களில் காற்றாலை செயற்திட்டங்களுக்கான உதிரிப்பாகங்கள் மன்னார் நகருக்குள் மக்களின் எதிர்ப்பை மீறியும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த பின்னனியிலேயே ஜானதிபதியின் வாக்குறுதியிலும் நம்பிக்கை அற்ற தன்மையே காணப்படுவதன் அடிப்படையில் மக்கள் தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம், உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரம் என அணைத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதியாக காற்றாலை செயற்திட்டத்துக்கு அனுமதி எமது அரசாங்கத்தால் வழங்கப்படாது என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வாக்குறுதி வழங்கப்பட்டது.

இருந்தபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் இந்த ஒரு மாத வாக்குறுதியை மாத்திரம் எவ்வாறு நம்புவது என பொது மக்கள் கேள்வி எழுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி வழக்கில் திடீர் திருப்பம்! வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் செம்மணியின் இராணுவ குற்றவாளிகள்

செம்மணி வழக்கில் திடீர் திருப்பம்! வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் செம்மணியின் இராணுவ குற்றவாளிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US