நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos)
மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது என மட்டக்களப்பு-அம்பறை
மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டினை பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் ஏனைய அழிவுகளிலிருந்து பாதுகாத்தருளும் பல்லின, பல் சமய மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் நிலையினை ஏற்படுத்தவேண்டி பிரார்த்தனையுடன் கூடிய அமைதிப்போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கத்தோலிக்க,மெதடிஸ், முஸ்லிம், இந்து மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
“முறையான பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்து”,“சுரண்டலை இலஞ்சத்தினை ஒழி”,“ஊழலை வீண்விரயத்தினை ஒழி”,“மனித இன சகவாழ்வினை பேணு”,“மனித உரிமையினை மதி”,“மனித மான்பினை மதி” உட்பட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு பிரார்த்தனை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,
“இந்த நாடு ஒரு இக்கட்டான நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.ஒரு அமைதியில்லை, சமாதானமில்லை, மக்கள் மத்தியில் மகழ்ச்சியில்லை, எல்லோர் வாழ்விலும் சோகம் நிறைந்திருக்கின்றது.
இதற்கு அடிப்படை காரணம் எம்மை ஆண்டவர்கள், எம்மை ஆண்டுகொண்டிருப்பவர்கள், இனி ஆளப்போகின்றவர்கள் மக்கள் நலனில் அக்கறைகொள்ளவில்லை. அதன் காரணமாகவே இவ்வளவு வேதனைகளையும் இலங்கை மக்கள் அனுபவித்துவருகின்றனர்.
இன மத வேறுபாடுகளின்றி அனைவரும் அனுபவித்துவருகின்றனர். அதனால் நாங்கள் இந்த நிலைக்கு கடவுள்தான் வழியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த பிரார்த்தனையினை முன்னெடுத்திருக்கின்றோம்.
மனித உரிமை,மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது.அதனை நாங்கள் தேட வேண்டும்.மனிதன் மனிதனை மதிக்காமல் வாழும் நிலையே காணப்படுகின்றது.
இல்லையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பசியினால் பட்டியினால் துன்பத்தினால் வாழும் நிலையேற்பட்டிருக்காது. மனித உரிமை மீறல்கள் மறைய வேண்டும். இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையே காணப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு எத்தனையோ மக்களை காணாமல் ஆக்கிவிட்டார்கள், எவ்வளவோ பேர் மறைந்துவிட்டார்கள்,எங்களுக்கு பேசும் உரிமையில்லை. யாராவது புகைப்படத்தினை வைத்திருந்தாலும் கைதுசெய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலை மாற வேண்டும்.
இதற்காக நாங்கள் போராட வேண்டும். இன மத மொழி வேறுபாடுகள் இல்லாமல் போராட வேண்டும்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
கல்முனை
கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இப் போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன் போது போராட்டகாரர்கள் “நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள்”,“மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்” ,“வினை விதைத்தவன் வினையறுப்பான்”,“குடும்ப ஆட்சி வேண்டாம் மக்கள் ஆட்சியே வேண்டும்”,“காலால் உதைக்காதீர்கள் கைகொடுக்கும் தெய்வமாக மாறுங்கள்”,“மக்கள் சேவை மகேசன் சேவை என அறிந்து கொள்ளுங்கள்” என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

























அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
