ஆளும் கட்சியின் வன்முறை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்
கொழும்பு அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த சென்ற ஆளும் கட்சியினரின் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட முன்னாள் அமைச்சர்களும் இருந்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அதில் கலந்துக்கொண்டவர்கள், அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதனையடுத்து, அவர்கள் காலிமுகத் திடல் கோட்டா கோ கமவை நோக்கி சென்றனர். காலிமுகத் திடலுக்கு அருகில் பொலிஸார் அவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
கோட்டா கோ கம பகுதிக்குள் சென்ற ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் அங்கும் தாக்குதல் நடத்தினர். முன்னதாக ஆளும் கட்சியினரை கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுக்காத பொலிஸார், கோட்டா கோ கமவுக்குள் சென்றது, அந்த இடத்தை நோக்கி கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தினர்.
ஆளும் கட்சியினருடன் சனத் நிஷாந்த உட்பட சில முன்னாள் அமைச்சர்களும் சென்றதாக கூறப்படுகிறது.
எவ்வாறானும் ஆளும் கட்சியின் வன்முறையாளர்களின் தாக்குதலில் கோட்டா கோ கம போராட்டகாரர்களில் பலர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டகாரர்கள் மீதான இந்த தாக்குதல் ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என சட்டத்தரணிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Thugs seen attacking protesters at Galle Face this afternoon. #lka #SriLanka pic.twitter.com/RZ5oRJSiqS
— MDWLive! SriLanka ?? (@MDWLiveSriLanka) May 9, 2022

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
