கொழும்பில் போராட்டம்! களத்தில் பொலிஸார் (Video)
கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் (03.10.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மலையக பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
காணி மற்றும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு
மலையக மக்கள் இத்தனை நாட்களாக முகங்கொடுத்து வரும் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 1987ஆம் ஆண்டின் பின் பெருந்தோட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு உரிமை பத்திரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் குவிப்பு
இந்த சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் லயன் முறை மாற வேண்டும், மலையக காணிகளில் தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
போராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அப்பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை பிரயோகத்திற்கான வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.







