ரணிலின் உருவப்பொம்மையுடன் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் (Video)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்பொம்மையொன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
அத்துடன் அந்த பொம்மைக்கு பணம் வழங்கப்படுவது போன்ற பாவனையையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியலில் வசந்த முதலிகே
இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான வசந்த முதலிகே, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை நாளை (13.12.2022) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, நீதிமன்றில் இன்று (12.12.2022) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
