அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை தாக்குதல்: தொடரும் பதற்றம் (Live)
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தினை கலைக்கும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பல மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கொழும்பு - மருதானையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி தடை உத்தரவை மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் விரட்டி சென்று கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - மருதானையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவை போராட்டக்காரர்களிடம் பொலிஸார் வாசித்து காட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையை நோக்கி நகர முற்பட்ட போது மருதானை டெக்னிக்கல் வீதிப்பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான தயார் நிலையில் இருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
என்ற போதும் எதிர்ப்பு பேரணியானது பொரளை பகுதியை நோக்கி திரும்பி மருதானை - டீன்ஸ் வீதிப்பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சிற்கு முன்பாக வீதியை மறித்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பில் தற்போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க கூட்டமைப்புகள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோரின் இணைவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருதானை பகுதியில் இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
