சுற்றிவளைக்கப்படவுள்ள கொழும்பு! இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது மற்றும் சுற்றிவளைப்பது உள்ளிட்ட போராட்டங்களில் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளது.
9ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றிவளைப்பது மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருக்களுக்கு வந்து அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்க் கட்சிகள், காலிமுகத்திடல் போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு
இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், எதிர்வரும் 9ம் திகதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக பங்கு பெறும்.

இதன்படி மலையக தோட்டங்களில் அன்றைய தினம் பணிகளில் ஈடுபடாமல், அமைதியான முறையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்படி மலையக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட வதிவாளர்களை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம்.
கொழும்பு மக்களுக்கும் அழைப்பு
அதேபோல கொழும்பு உட்பட நகரங்களில் வர்த்தக நிலையங்களையும், அலுவலகங்களையும் மூடி, முழுமையாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் படியும், தமது வேலைத்தள பணியாளர்களையும், அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொள்ள இடமளிக்கும் படியும் அனைத்து தரப்பினரையும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கோருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri