புத்தளத்தில் பொலிஸ் அதிகாரியின் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்(Photos)
புத்தளம்- கற்பிட்டி பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (14.06.2023) கற்பிட்டி பகுதி மக்களால் ஆர்ப்பட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் கற்பிட்டி விகாரை விகாரதிபதி தலைமையில் இடம்பெற்றதோடு சர்வமதத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அமைதியான ஆர்ப்பாட்டம்
பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி கற்பிட்டி பகுதியில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் கடத்தல் முறியடிபுக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்தமையினால் அப்பகுதியின் போதைப்பொருள் பாவனை ஆதிக்கம் குறைவடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்
இதனால் அவர் மீண்டும் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
