மட்டக்களப்பில் கிராம சேவகரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி போராட்டம் (photos)
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியின் கிராம சேவகரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரியும், நிறுத்தப்பட்டிருக்கும் உலர் உணவு நிவாரணப் பொருட்களை வழங்கக்கோரியும் கிராம மக்களினால் பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (19.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
''ஏழைகளின் நிவாரணம்தான் இதற்கு காரணம் என்றால் அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், கிராம அதிகாரியினை தாருங்கள், எங்களது கிராம சேவகரை மீண்டும் பணியாற்ற எமக்கு வழிவிடு, மக்களுக்காக சேவை செய்யும் அதிகாரியை உனக்கு பிடிக்காதா, பிரதேச செயலாளரே எங்களது கிராம சேவையாளரை ஏன் மாற்றினாய்? காரணம் கூறு?'' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம சேவகரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு
உலக உணவு திட்டத்தில் கிராமசேவகர் நேர்மையான முறையில் செயற்பட்டதாகவும் பயனாளிகளை நிவாரணம் வழங்கிய குழுவினரே தெரிவு செய்ததுடன் கிராம சேவகர் தெரிவு செய்து நிவாரணம் வழங்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எவ்வாறு கிராம சேவகர் மோசடியில் ஈடுபட்டிருக்க முடியும். இது பிரதேச செயலாளரின் திட்டமிட்ட இடமாற்றம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேர்மையான எங்களது கிராம சேவகர் எங்களுக்கு வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டதுடன் கருத்துக்களும் வெளியிட்டுள்ளனர்.
கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வருகை தந்து பிரச்சினை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மக்களின் பிரச்சினைகள்
இதன்போது இரண்டு தினங்களுக்குள் குறித்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தருவதாக கோவிந்தன் கருணாகரம் உறுதியளித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் குறித்த இடத்திற்கு வருகை தந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
