அம்பாறையில் தமிழர்களின் காணி அபகரிப்பு - விரைவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக போராட்டம்

Sri Lankan Tamils M A Sumanthiran Sri Lanka Politician Sri Lankan political crisis
By Bavan Jul 17, 2026 02:35 PM GMT
Report

தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்த தமிழரசுக் கட்சி தற்போது கூட்டணி அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் நேற்று (16.07.2026) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி அமைத்த தமிழரசுக்கட்சி

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் அடிப்படையில், முதலாவது விதியில் தமிழர்களுக்கான சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும், அதேபோன்று முஸ்லிம்களுக்கு சுயாட்சி அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே நோக்கம்.

எனவே, இதனடிப்படையில் இந்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் மற்றும் தலைவர் செயற்படுகிறார்கள். ஆகவே இந்த யாப்பை தேசிய தலைவர் பார்க்கவில்லையா? அல்லது அன்ரன் பாலசிங்கம் பார்க்கவில்லையா? என எனக்கு கேள்வி எழுகின்றன.

அம்பாறையில் தமிழர்களின் காணி அபகரிப்பு - விரைவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக போராட்டம் | Protest Against The Tamil Nationalist Party Soon

இதேவேளை, தனித் தமிழ் ஈழம் என்ற இலக்கு எத்தனை ஆயிரம் மக்களை இழந்துள்ளோம். எத்தனை ஆயிரம் போராளிகளை வீர மரணமடைந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்துடன், இவற்றிற்கு காரணமாக இருந்த தனித் தமிழ் ஈழத்துக்காக நாங்கள் போரடிக் கொண்டிருக்கும் போது, இந்த தமிழரசுக் கட்சி இத்தனை வருடமாக முஸ்லிம்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என செயற்பட்டுள்ளனர்.

தமிழர்களின் காணிகள் அபகரிப்பு

எனவே இது தான் காரணமா? சுயாட்சியை முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் என சொன்னால் முஸ்லிம்களுக்கு எப்படி வடக்கு கிழக்கில் சுயாட்சியை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. கடந்த மைத்திரி ஆட்சியின் போது முஸ்லிம் ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டு வந்தார்கள்.

எனவே எங்கள் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் அம்பாறை மாவட்டத்தை தாரை வைப்பதற்கான உரிமையை யார் தந்தது? நீங்கள் யார்? அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 50 மேற்பட்ட தமிழ் கிராமங்களில் உள்ள தமிழ் மக்களை அடித்து விரட்டப்பட்டு ஆக்கிரமித்துள்ளனர்.

அம்பாறையில் தமிழர்களின் காணி அபகரிப்பு - விரைவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக போராட்டம் | Protest Against The Tamil Nationalist Party Soon

இவ்வாறு அம்பாறையில் தமிழ் மக்களின் கிராமங்கள் பறிபோனதை எதிர்த்து ஏன் தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கவில்லை அதற்கு எதிராக ஏதாவது போராட்டம் செய்தார்களா? இல்லை.

இவைகள் அனைத்தும் தெரிந்து தானே எல்லோரும் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். காலம் காலமாக கிழக்கு மாகாண தமிழர்களை ஏன் ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கில் வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்

இந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நல்லாட்சி காலத்தில் தீர்வு காணப்பட வேண்டியது அதற்கான தீர்வுகளை தமிழரசு கட்சி ஏன் எட்டிக் கொள்ளவில்லை?

அம்பாறையில் தமிழர்களின் காணி அபகரிப்பு - விரைவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக போராட்டம் | Protest Against The Tamil Nationalist Party Soon

எனவே தமிழர்களின் போராட்டத்தை கடந்த காலத்தில் எதிர்த்த முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்த இந்த 6 கட்சிகளை கொண்ட திருட்டு கூட்டணி வெற்றி பெறாது என்பதுடன், கிழக்கு மாகாணத்தில் பாரிய ஒரு போராட்டத்தை நாங்கள் நடத்துவதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.

இவர்களுக்கு அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை, அதனால் தான் திருட்டு கூட்டணி அமைந்து தமிழ் மக்களை ஏமாற்றும் பெரிய ஒரு துரோகச் செயல் ஈடுபட்டுள்ளனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US