சாணத்தால் தாக்கப்பட்டமை தொடர்பில் சுகீஸ்வர பண்டார வெளியிட்ட பரபரப்பு தகவல்
புதிய இணைப்பு
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்தின் மீது சாணத்தையும் முட்டைகளையும் வீசியது ஜேவிபி கட்சி உறுப்பினர்கள் என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார கூறியுள்ளார்.
இன்று (28) நிதி அமைச்சின் செயலாளர் இல்லத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது சொந்தக்கட்சி உறுப்பினர்களே தங்கள் தலைவர்கள் மீது சாணம் வீசும் நிலைக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ''தங்கள் சொந்தக் கட்சி உறுப்பினர்களே வந்து, தங்கள் தலைவர்கள் மீது சாணம் வீசுகிறார்கள். இதற்கு நாங்கள் வெட்கப்படுகிறோம்.
ஜேவிபி கட்சி உறுப்பினர்களே வந்து ஹர்ஷன சூரியப்பெரும மீது சாணம் வீசியுள்ளனர். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக்குடியுரிமை பெற்றவர். அவரிடம் ஒரு பட்டமும் இல்லை.
நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தையும், சொத்துக்களையும், வளங்களையும் ஜேவிபியினர் சுரண்டி வருகின்றார்கள். இன்று, போரை வெளிக்காட்டி, அதனை மிக தெளிவாக உணர்த்தும் ஒரு நபர் அனுர குமார திசாநாயக்க என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று காலை (28) பெலவத்தை, அக்குரேகொடாவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளரின் இல்லத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலர் மீது சாணத்தால் தாக்குதல்
இதன்போது ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு அருகே குறித்த குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை இலக்கு வைத்து அங்கிருந்தவர்களால் முட்டை மற்றும் சாண வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
இதனைடுத்து, நிலைமையைச் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் இரு குழுக்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களை அகற்றியுள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO