ஞானசார தேரரின் உடை விவகாரம்! வீதியில் இறங்கிய ஆதரவாளர்கள்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடைகளைக் களைந்து சிறைச்சாலைச் சீருடை அணிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, அவரது காவி உடைகளைக் களைந்து சிறைச்சாலைச் சீருடை அணிவித்தனர்.
அமைதி வழிப் போராட்டம்
சிறைச்சாலைத் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (07) புதன்கிழமை கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

உலப்பனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரிதர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கர் அதிவணக்கத்திற்குரிய பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர் தலைமையிலான குழுவினரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri