அநுர அரசிற்கு நெருக்கடியை ஏற்படுத்தவுள்ள காவி உடை - களமிறங்கும் இளைய தலைமுறை
மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் ஆடை விவகாரம் தொடர்பில் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் இன்று அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதியகம சண்திம தேரர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் அனைவருக்குள்ளும் ஒரு நாடு, தேசம், மதம் மற்றும் கலாசாரம் உள்ளது. நீதிமன்ற உத்தரவை நாங்கள் எதிர்க்கவில்லை. எனினும் எமது கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி அவரை பொதுமக்களுக்கு முன்பாக அந்த முறையில் அழைத்துச் செல்லும் காட்சி பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
காவி உடை
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவம் ஒரு முன்னுதாரணமாக மாறுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக பொதுமக்களும், குறிப்பாக இளைய தலைமுறையினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவும் இது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளார். ஒரு பௌத்தனாக இந்த விடயம் தனக்கு வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கம் யாவரும் சட்டத்தின் முன் சமம் என்ற கோட்பாட்டுக்கு அமைவாக நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்குரோந்து அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில், ஞானசார தேரரின் காவி உடை அகற்ற விடயத்தை பெரும் பூதாகாரமாக மாற்ற முயற்சித்து வருகின்றமை குறிப்பிடததக்கது.