சுவசெரிய சேவையை இராணுவமயப்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம
சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவையின் நிர்வாகம் இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொணடுள்ளனர்.
1990 என்னும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை இந்திய நிதியுதவியுடன் கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சுடன் இணைந்த அரச சேவை
இதன் தொடக்கம், சுகாதார அமைச்சுடன் இணைந்ததாக அரச சேவையாகவே இதுவரைகாலமும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதன் பணிப்பாளராக ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கு அப்பால் தற்போது அதன் நிர்வாகத்தை முற்றாக கடற்படையிடம் ஒப்படைக்கும் தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையிலும், தொடர்ந்து இந்த சேவை சுகாதார அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்கும் நோக்குடனும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகம் முன்பாக திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
400 ஊழியர்கள் போராட்டம்
இதன்போது அச்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைத் தொடர்பிலும் அரசாங்கம் தமக்குத் தீர்வினைப் பெற்றுத்தருமாறும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
நாட்டை உலுக்கிய பெரும் சோகம் - முதியோர் இல்லத்தில் தீயில் கருகி பலியான 13 பேர் - வெளியான அதிர்ச்சி தகவல்